» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றவர்கள் மீதே கார் மோதி விபத்து - 8பேர் உயிரிழப்பு!
புதன் 6, மே 2026 11:28:44 AM (IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பைக் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பைக்குகளில் வந்த இருவர் காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜலால்பூர் பகுதியில் இருந்து எதிர்பாராத விதமாக மிக அதிவேகமாக வந்த கார் ஒன்று, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மேலும் இருவர் தண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கார் டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மனிதாபிமானத்துடன் மற்றவர்களைக் காப்பாற்றச் சென்ற 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சி : உத்தரப்பிரதேசம், பீகாரில் 10 பேர் கைது
திங்கள் 22, ஜூன் 2026 11:28:42 AM (IST)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் 16 வகை கூட்டு மருந்துகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:19:02 AM (IST)

மராட்டியத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் மேற்கூரை இடிந்து 7 பக்தர்கள் பலி!
ஞாயிறு 21, ஜூன் 2026 11:11:51 AM (IST)

செல்போன் பறித்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பிய வாலிபர் திடீர் மரணம்: கூட்டாளி கைது!
சனி 20, ஜூன் 2026 12:16:00 PM (IST)

நீட் தேர்வில் உச்சக்கட்ட தொழில்நுட்பக் கோளாறு : நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!
சனி 20, ஜூன் 2026 12:05:32 PM (IST)


