» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!
திங்கள் 22, ஜூன் 2026 10:54:12 AM (IST)

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் உச்ச நடிகராக இருந்து, அரசியலிலும் பெரும் விசில் புரட்சியை ஏற்படுத்தி, தற்போது தமிழக முதல்-அமைச்சர் நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அவர் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்-அமைச்சர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறேன்.” என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:38:12 AM (IST)


