» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மோடி அரசு அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்து போகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:45:56 PM (IST)

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, "பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்காக உறுதியாக நிற்காமல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பணிந்து போகிறார்" என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கொல்லத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. சாதாரண மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சவாலாக மாறியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் மத்திய அரசின் கொள்கை என்னவாக இருக்கிறது? பிரதமர் மோடி இந்திய மக்களுக்காகப் போராடவில்லை; அவர் நாட்டுக்காக உறுதியாக நிற்கவில்லை. அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் நலன்களுக்காகப் பணிந்து போகிறார்.
பிரதமர் மோடி சர்வதேச அளவில் சமரசங்களுக்கு உள்ளாகிவிட்டதாகச் சாடிய பிரியங்கா காந்தி, அதன் விளைவுகளை இந்திய மக்களே அனுபவிப்பதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி சமரச அரசியலில் ஈடுபடுவதால்தான் அதிபர் ட்ரம்ப்புக்கு அவர் பணிந்து போகிறார். இதற்கான விலையைச் சாதாரண மக்களாகிய நீங்கள்தான் விலை உயர்வு மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கக் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததால் இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். கேரளாவுக்கு இப்போது ஒரு புதிய வகை அரசியலும், சிறந்த நிர்வாகமும் தேவை. தரமான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்குச் சரியான ஊதியம் கிடைப்பது அவர்களின் அடிப்படை உரிமை என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்க 2027 ஜூன் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு: புதிய 'செயலி அறிமுகம்!
செவ்வாய் 19, மே 2026 12:51:15 PM (IST)

குடகு சுற்றுலாத் தலத்தில் கோர விபத்து: யானைகள் சண்டையில் சிக்கி பெண் பலி!
திங்கள் 18, மே 2026 5:55:02 PM (IST)

கேரளாவில் 10 ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி: புதிய முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்பு!
திங்கள் 18, மே 2026 12:34:51 PM (IST)

ஹார்முஸ் நீரிணையை கடந்து 20,000 டன் சமையல் எரிவாயுவுடன் குஜராத் வந்தது இந்தியக் கப்பல்!
திங்கள் 18, மே 2026 10:54:33 AM (IST)

ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!
ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)



ஆமாApr 3, 2026 - 07:38:30 PM | Posted IP 172.7*****