» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடகு சுற்றுலாத் தலத்தில் கோர விபத்து: யானைகள் சண்டையில் சிக்கி பெண் பலி!
திங்கள் 18, மே 2026 5:55:02 PM (IST)
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள துபேரே யானைகள் முகாம் அருகே காவிரியாற்றில் வளர்ப்பு யானைகள் மோதிக்கொண்ட விபத்தில், ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் யானையின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் குடகு (கூர்க்) மாவட்டத்தில் புகழ்பெற்ற துபேரே யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள காவிரியாற்றுப் பகுதியில் இன்று வளர்ப்பு யானைகள் குளிப்பாட்டப்பட்டு வந்தன. கோடை விடுமுறையைக் கழிக்க அங்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆற்றங்கரையில் திரண்டு நின்று யானைகள் குளிப்பதை ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த காஞ்சன் மற்றும் மார்த்தாண்டா என்ற இரு வளர்ப்பு யானைகளுக்கு இடையே எதிர்பாராத விதமாகத் திடீரென மோதல் வெடித்தது. யானைகளை உடனடியாகக் கட்டுப்படுத்த பாகன்கள் தீவிரமாக முயன்றும், இரண்டு யானைகளும் ஆக்ரோஷமாக ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டு சண்டையிட்டன.
இந்த ஆக்ரோஷமான சண்டையின் உச்சகட்டத்தில், மார்த்தாண்டா என்ற யானை நிலைதடுமாறி ஆற்றங்கரையை நோக்கிப் பக்கவாட்டில் கீழே விழுந்தது. அப்போது, துரதிர்ஷ்டவசமாக அந்த யானையின் மிக அருகில் நின்றுகொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த துளசி (வயது 33) என்ற பெண் தப்பி ஓட முடியாமல், கீழே விழுந்த இமாலய எடைகொண்ட யானையின் அடியில் சிக்கிக்கொண்டார்.
அங்கிருந்த பாகன்கள் மற்றும் பொதுமக்கள் துளசியை மீட்க உடனடியாகப் போராடியும், யானையின் அடியில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாகப் பலியானார். யானைகள் மோதிக்கொள்ளும் இந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமைச்சர் இரங்கல் மற்றும் விசாரணை:
இச்சம்பவம் குறித்து அறிந்த கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கான்ட்ரே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு யானைகளின் பராமரிப்பில் எவ்விதக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து உடனடியாகத் தீவிர விசாரணை நடத்தவும் அவர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு: சானே டகாயிச்சி உறுதி!
வியாழன் 2, ஜூலை 2026 5:00:33 PM (IST)

பீகார், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் 30-ம் தேதி இடைத்தேர்தல் : தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லை
வியாழன் 2, ஜூலை 2026 4:00:09 PM (IST)

ஓய்வூதியமும் மருத்துவக் காப்பீடும் இணைந்த மத்திய அரசின் புதிய திட்டம் : விரைவில் அறிமுகம்!
வியாழன் 2, ஜூலை 2026 11:48:48 AM (IST)

சர்வதேச சந்தை எதிரொலி: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்தது
புதன் 1, ஜூலை 2026 11:51:58 AM (IST)

இந்தியாவின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:59:56 PM (IST)

புதிய மும்மொழித் திட்டத்தில் தளர்வு: சிபிஎஸ்சி அறிவிப்பால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் நிம்மதி!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:36:27 AM (IST)


