» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பீகார், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் 30-ம் தேதி இடைத்தேர்தல் : தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லை
வியாழன் 2, ஜூலை 2026 4:00:09 PM (IST)
பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் காலியான பின்னணி: பீகார் (பங்கிப்பூர் தொகுதி): இத்தொகுதியின் பிரதிநிதியாக இருந்த பாஜகவின் நிதின் நபின், சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். இதன் காரணமாக பங்கிப்பூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசம் (தாட்டியா தொகுதி): இத்தொகுதியின் பிரதிநிதியாக இருந்த காங்கிரசின் ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தாட்டியா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
குஜராத் (மஞ்சள்பூர் தொகுதி): இத்தொகுதியின் பிரதிநிதியாக இருந்த பாஜகவின் யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் மஞ்சள்பூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு அறிவிப்பில்லை:
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இருப்பினும், இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் இந்த பட்டியலில் வெளியிடவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குவங்கத்தில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 6 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:14:51 PM (IST)

சொத்துக் குவிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:37:47 PM (IST)

ஒரே பெயரால் குழப்பம்: ரயிலில் கத்திக்குத்து சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி விளக்கம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:53:03 AM (IST)

கர்நாடகாவில் என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை : வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் சூறை!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:36:06 AM (IST)

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:22:04 PM (IST)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா புதிய உயரம் தொடும் : சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:02:22 PM (IST)


