» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
செப்.30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு
வெள்ளி 15, மே 2026 12:03:01 PM (IST)
சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் சர்க்கரை இருப்பை உறுதி செய்ய சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30 வரை தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் உரங்கள் தடைபட்டுள்ள நிலையில், நாட்டின் வேளாண் துறை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரக் கூடிய பருவத்தில் கரும்பு உற்பத்தியில் தடை ஏதேனும் ஏற்பட்டால், சர்க்கரைக்கு தட்டுப்பாடோ விலை உயர்வோ ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் சர்க்கரை இருப்பை உறுதி செய்ய சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30 வரை தடை விதிப்பதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்த தடை அறிவிப்பு பொருந்தாது என்று கூறியுள்ளது.
உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி குறைவால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவையை முன்னுரிமையாகக் கருதி, சர்க்கரை ஏற்றுமதி தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதி தடைசெய்யப்பட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா 2-வது பெரிய நாடாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமர் கோயிலில் ரூ.7 கோடி கையாடல் வழக்கு : அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 3:53:46 PM (IST)

ராஜஸ்தானில் அதிர்ச்சி: கடத்தப்பட்ட 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
திங்கள் 29, ஜூன் 2026 11:51:00 AM (IST)

ஹைதராபாத் சாலைக்கு 'டொனால்டு டிரம்ப்' பெயர்: தெலுங்கானா அரசுக்கு அமெரிக்க அதிபர் நன்றி!
சனி 27, ஜூன் 2026 11:14:48 AM (IST)

ராமர் கோவில் காணிக்கை மோசடி குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
வெள்ளி 26, ஜூன் 2026 4:45:23 PM (IST)

இந்தியாவின் புதிய தங்கச் சுரங்கம்: ஆந்திராவில் 0.8 டன் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு!
வெள்ளி 26, ஜூன் 2026 11:24:32 AM (IST)

இந்தியாவில் ரூ.4.1 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ ஆலோசனை!
வியாழன் 25, ஜூன் 2026 5:43:27 PM (IST)


