» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பஞ்சாப்பில் அஸ்தியை கரைக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: லாரி மீது வேன் மோதி 9 பேர் சாவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:38:37 AM (IST)
பஞ்சாப்பில், மூதாட்டியின் அஸ்தியை கரைக்க சென்றபோது வேன் விபத்தில் சிக்கயதில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர்..
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர்-பாசில்கா சாலையில் நேற்று ஒரு கோர விபத்து நடந்தது. ஒரு வேன் ஜாலாலாபாத்தில் இருந்து அமிர்தரசரசில் உள்ள பியாஸ் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் பெண்கள், குழந்தைகள் உள்பட 32 பேர் இருந்தனர். மூதாட்டி ஒருவரின் அஸ்தியை பியாஸ் ஆற்றில் கரைப்பதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
ஜங்கா வாலா மோர் அருகே வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து ஒரு லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் வேனில் வந்த 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.. மேலும் பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.
விபத்தில் இறந்தவர்கள் கர்னைல் சிங், லட்சுமி ராணி, சுக்பிந்தர் கவுர், பாகோ ராணி, மாயா பாய், சுரேந்தர் சிங், ராஜ் குமார், தர்ஷன் சிங் மற்றும் வித்யா ராணி என அடையாளம் காணப்பட்டனர். லேசான காயம் அடைந்த 12 வயது சிறுவன்தான், விபத்து பற்றிய விவரங்களை போலீசாருக்கு விளக்கி கூறினான்.
பாட்டியின் அஸ்தியை கரைப்பதற்காக அதிகாலையிலேயே பயணத்தை தொடங்கியதாகவும். எரிபொருள் நிரப்பிக்கொண்டு இந்த பகுதியில் வந்தபோது விபத்து ஏற்பட்டது என்றும் போலீசாரிடடம் கூறி உள்ளான். போலீசார் விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்: திமுக புறக்கணிப்பு!
புதன் 22, ஜூலை 2026 12:16:45 PM (IST)

நீட் தேர்வு முறைகேடு, மாணவர்கள் மீது தடியடி: மோடி, அமித் ஷா பதவி விலக ராகுல் வலியுறுத்தல்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:58:25 PM (IST)

ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:35:16 PM (IST)

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்டச் சோதனை முயற்சி!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:36:15 AM (IST)

டெல்லியில் சிஜேபி போராட்டம் தீவிரம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!
திங்கள் 20, ஜூலை 2026 5:10:43 PM (IST)

நீட், ராமர் கோவில் விவகாரங்களால் கடும் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 4:23:28 PM (IST)


