» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவின்படி, இனி யுபிஐ (UPI) மற்றும் ரூபே (RuPay) கார்டு பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் நேற்று நிலவிய கடும் அமளிக்கு இடையே, ‘வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026’ நிறைவேற்றப்பட்டது. இப்புதிய மசோதா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மின்னணு உற்பத்தித் துறைக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மசோதா குறித்துப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததாவது: அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய மசோதாவில் பல்வேறு நிதி விதிகளும் நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளை அமைக்கப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மொபைல் போன், கணினி, லேப்டாப், சர்வர்கள் உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சார்ந்த ஆலைகளை நிறுவுவதற்கு சிறப்பு வரிச் சலுகைகள் அளிக்கப்பட உள்ளன. இதன் மூலம் உலகின் முதன்மை மின்னணு பொருட்கள் உற்பத்திச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும்.
UPI மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்:
தற்போதைய சட்ட விதிகளின்படி RTGS மற்றும் NEFT பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
புதிய மசோதாவின்படி, இனி யுபிஐ (UPI) மற்றும் ரூபே (RuPay) கார்டு பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இக்கட்டண உயர்வால் சாமானியப் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பால் வாங்குவது உள்ளிட்ட அன்றாடச் சிறிய அளவிலான செலவுகளுக்கான UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படாது. மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் (Large Merchants) மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இக்கட்டணம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:38:12 AM (IST)


