» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காங்கோவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழப்பு!

புதன் 22, நவம்பர் 2023 10:48:27 AM (IST)

காங்கோவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 இளைஞர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ குடியரசு. இந்நாட்டின் ராணுவத்திற்கு புதிதாக ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், தலைநகர் பிரேஸ்விலியில் உள்ள மைதானத்தில் இன்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது, இளைஞர்கள் அனைவரும் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory