» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு: மேல்முறையீடு மனுக்கள் ஏற்பு!

வெள்ளி 24, நவம்பர் 2023 12:06:16 PM (IST)

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு எதிரான வழக்கில் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான புர்னேன்டு திவாரி, சுகுனாகர் பகாலா, அமித் நாக்பால், சஞ்சீவ் குப்தா, நவ்தேஜ் சிங் கில், பீரேந்திர குமார் வெர்மா, சவுரப் வசிஸ்ட், ராகேஷ் கோபகுமார் ஆகிய 8 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கத்தார் உளவுப் பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். எனினும், அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

அதேநேரத்தில், அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அவர்கள் அனைவருக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள், இந்திய தூதரகத்தை அணுக அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, 8 பேரையும் பத்திரமாக மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கைகளை தொடங்கியது. 8 பேரும் கடற்படையில் பொறுப்புள்ள அதிகாரிகளாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்நிலையில், 8 பேரில் ஒருவரின் சகோதரியான மீட்டு பார்கவா, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தனது சகோதரரை பத்திரமாக மீட்க அரசு தனது நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்றும் தாமதமின்றி அவர்கள் அனைவரும் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

இந்தியன்Nov 25, 2023 - 11:33:44 AM | Posted IP 162.1*****

மத்திய அரசை மதிக்காவிட்டால் இந்தியாவில் உள்ள கத்தார் தூதரகத்தை கொளுத்தி விடுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory