» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 5 நாட்டு மக்களுக்கு விசா இல்லாமல் அனுமதி!
சனி 25, நவம்பர் 2023 11:48:54 AM (IST)
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாண்டு, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று சீனா அறிவித்துள்ளது.

சீனாவிற்குள் நுழைபவர்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்தது. அந்தக் கட்டுப்பாடு இந்த ஆண்டின் துவக்கத்தில் தளர்த்தப்பட்ட நிலையில், சீனா இந்த ஆறு நாட்டு மக்களுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி அளித்துள்ளது.
இதற்குமுன் புருநெய், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்திருந்தது. கொரானா தொற்றினால் அந்தச் சலுகையை நிறுத்தி வைத்தது. கொரானா தொற்றுக்குப் பின்னர் புருநெய், சிங்கப்பூருக்கு மட்டும் மீண்டும் அனுமதியளித்தது.
முதல் ஆறு மாதத்தில் மட்டும் 40 லட்சம் மக்கள் சீனாவிற்குள் வந்து சென்றுள்ளதாக அந்நாட்டின் குடிவரவுத் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனா இப்போது தனது மந்தமான பொருளாதாரத்தை சரி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. சமீபமாக டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் போன்ற பெரிய முதலீட்டாளர்கள், வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்கச் சீனா வருவது நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)
