» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் தீவிபத்து: 11 பேர் உயிரிழப்பு!
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:46:10 AM (IST)

பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் தனியார் வணிக வளாகம் செயல்படுகிறது. இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். மளமளவென எரிந்த தீ வணிக வளாகத்தின் மற்ற மாடிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் போல காட்சியளித்தது.
இதற்கிடையே தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மற்றொருபுறம் வணிக வளாகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. இதன்மூலம் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி மேலும் பலர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வணிக வளாகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)
