» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!
புதன் 29, நவம்பர் 2023 5:18:37 PM (IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 12 பிணைக்கைதிகளுக்கு நிகராக 30 பாலஸ்தீனக்கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
9 இஸ்ரேலியப் பெண்களும், ஒரு 17 வயது நிரம்பிய சிறுமியையும், தாய்லாந்தைச் சேர்ந்த இருவரையும் ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது. வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் இந்த போர் நிறுத்தத்தில் மேலும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை ஹமாஸ் அமைப்பு 81 பிணைக்கைதிகளை விடுதலை செய்துள்ளது, இஸ்ரேல் 180 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்துள்ளது. நிரந்தர போர் நிறுத்தத்தில் துளியும் விருப்பம் கொள்ளாத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் போரை நிறுத்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்தப் போர் துவங்குவதற்குக் காரணமாக இருந்த ஹமாஸ் தாக்குதலில், மொத்தம் 240 பேர் பிடித்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு சமுகத் தீர்வு காண வேண்டும் : சீனா வலியுறுத்தல்!
சனி 10, மே 2025 12:22:37 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
சனி 10, மே 2025 12:01:16 PM (IST)

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)
