» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும் : ஜஸ்டின் ட்ரூடோ
வியாழன் 30, நவம்பர் 2023 5:10:21 PM (IST)
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியை கொலை செய்ய நடந்த முயற்சியில் இந்தியருக்கு தொடர்புள்ளதாக வெளியான தகவலைக் குறிப்பிட்டு இந்த விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

2020-ல் இந்தியா காலிஸ்தான் பிரிவினைவாதியான நிஜ்ஜாரைப் பயங்கரவாதி என அறிவித்தது. ஆனாலும் ட்ரூடோ முன்வைக்கிற குற்றச்சாட்டை அபத்தம் மற்றும் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளது இந்திய அரசு.
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்ற சதியை முறியடித்துள்ளது அந்நாட்டு அரசு. இதில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள 52 வயதான நிகில் குப்தா இந்திய அரசால் கொலை செய்ய நியமிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
கனடா பிரதமர், "அமெரிக்காவில் இருந்து வந்துள்ள செய்தி, ஆரம்பத்தில் இருந்து நாங்கள் என்ன சொல்லி வருகிறோமோ அதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்தியா இதில் தீவிரம் காட்ட வேண்டும். இந்திய அரசு எங்களுடன் இணைந்து இந்தப் பிரச்னையின் பின்னணியை விசாரிக்க ஒத்துழைப்பு தர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , கனடா மக்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். ட்ரூடோ, "எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல இது. கனடியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் பொறுப்பு, அதனை தொடர்ந்து நாங்கள் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
