» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஊழல் வழக்கு எதிரொலி: சிங்கப்பூா் அமைச்சா் ஈஸ்வரன் பதவி விலகல்

வெள்ளி 19, ஜனவரி 2024 10:35:54 AM (IST)

ஊழல் வழக்கு எதிரொலியாக சிங்கப்பூா் போக்குவரத்துத் துறை அமைச்சா் பதவியிலிருந்து தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த ஈஸ்வரன் ராஜிநாமா செய்தார்.

கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் அரசியலில் இருந்து வரும் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த ஈஸ்வரன், கடந்த 2006-ஆம் ஆண்டில் முதல் முறையாக அமைச்சரவையில் சோ்க்கப்பட்டாா். கடந்த 2021-இல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவா், வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகப் பொறுப்பையும் கவனித்து வந்தாா்.

இந்நிலைியில், சிங்கப்பூா் எஃப் 1 காா் பந்தய விவகாரத்தில்தொழிலதிபா் ஓங் பெங் செங்கிடமிருந்து ஆயிரக்கணக்கான டாலா் மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுபுகார் எதிரொலியாக அவர் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவா் கூறுகையில், ‘நான் குற்றமற்றவன். என் பெயருக்கு விளைவிக்கப்பட்டுள்ள களங்கத்தைப் போக்குவதில் இனி கவனம் செலுத்துவேன்’ என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory