» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கடலுக்கடியில் வடகொரியா அணு ஆயுத சோதனை : போர் பதற்றம் அதிகரிப்பு!

சனி 20, ஜனவரி 2024 8:28:25 AM (IST)

தென்கொரியாவின் கூட்டுப்போர் பயிற்சிக்கு பதிலடியாக கடலுக்கடியில் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே இந்த கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்த வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தென்கொரியா அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தென்கொரியாவுடன் அமைதியான ஒருங்கிணைப்பு என்ற தனது நீண்ட கால இலக்கை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் வடகொரியாவை சீண்டினால் அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் முற்றிலும் அழிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் தென்கொரியா கடந்த 15-ந் தேதி மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியது. இதில் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க நாடுகளின் ராணுவம் இணைந்து பல்வேறு போர் பயிற்சிகளை நடத்தின. இதற்கு பதிலடியாக வடகொரிய ராணுவம் தனது கடற்படையை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

அதன் ஒருபகுதியாக நேற்று தென்கொரியாவின் கடலுக்கடியில் ஹைல்-5-23 என்ற அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது. வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. இதனை மீறி வடகொரியா தற்போது மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு உள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory