» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென்கொரிய படங்கள் பார்த்த மாணவர்களுக்கு வடகொரியா கடும் தண்டனை!

சனி 20, ஜனவரி 2024 5:03:47 PM (IST)

தென்கொரிய திரைப்படங்கள் பார்த்த வடகொரிய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் தண்டனை அளித்துள்ளது. 

வட கொரியாவில் தென்கொரிய திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் பார்த்த இரண்டு சிறுவர்களுக்கு அந்நாட்டு அரசு 12 ஆண்டுகளுக்கு கடின வேலைகள் செய்யும் தண்டனையை அளித்துள்ளது. இது தொடர்பான காணொலி ஒன்றினை வடகொரியாவிலிருந்து வெளியேறிவர்ளுடன் தொடர்புடைய நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

கே-பாப் எனப்படும் தென் கொரிய காணொலி பாடல்கள் மற்றும் திரைப்படங்களை பார்த்ததாகவும், பரப்பியதாகவும் இரண்டு 16 வயது சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு 12 ஆண்டுகள் கடின வேலை செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இணையத்தில் பரவிவரும் காணொலியில், ஏறத்தாள 1000 மாணவர்கள் சுற்றி அமர்ந்திருக்கும் பொதுவெளி அரங்கம் ஒன்றில், இரண்டு மாணவர்கள் அரக்கு நிற அங்கி அணிந்து கையில் விலங்கு பூட்டப்பட்டு நிற்கிறார்கள். அவர்களுக்கு அனைவர் முன்னிலையில் இந்த தண்டனை வழங்கப்படுகிறது. 

"வெளிநாட்டுக் கலாச்சாரம் இவர்களை மயக்கியுள்ளது. அவர்கள் வாழ்க்கை நாசமாவதற்கு அதுவே காரணமாகிவிட்டது" என அந்த இடத்தில் ஒரு அதிகாரி கூறுகிறார். தென்கொரிய பொழுதுபோக்கு படைப்புகளைப் பார்க்கும் வடகொரியர்களுக்கு இதுபோன்ற தண்டனைகளை வடகொரிய அரசு அளிப்பது இது முதல்முறையல்ல. 


மக்கள் கருத்து

உண்மJan 23, 2024 - 07:55:11 AM | Posted IP 162.1*****

அங்கேயும் இங்கே மாதிரி திராவிட குடும்ப ஆட்சி தான், குடும்ப ஆட்சியை வளர்த்து விட்டால் நாடு இப்படித்தான் நாசமாக போகும். தலைவனுக்கு அடிமையாக உயிர் விட வேண்டியிருக்கும்.

hahaJan 21, 2024 - 03:10:44 PM | Posted IP 172.7*****

A stupid and mentally insane leader who is treating his country people like slaves.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory