» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரேசிலில் கனமழை வெள்ளம்; நிலநடுக்கம்: அவசர நிலை பிரகடனம் - மக்கள் பீதி!

திங்கள் 22, ஜனவரி 2024 8:25:03 AM (IST)



பிரேசிலில் கனமழை காரணமாக மருத்துவமனைகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

பிரேசிலின் தெற்கு பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று அங்குள்ள சாவ் பாலோ மாகாணத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் அங்கு பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 

எனவே முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பல வீடுகள் அங்கு இருளில் மூழ்கின. மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் பலரை மீட்பு படையினர் மீட்டனர். எனினும் பெண்கள் உள்பட 3 பேர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

அதேபோல் சொரோகாபா நகரில் உள்ள 2 மருத்துவமனைகளை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இதன்காரணமாக அந்த பகுதிகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரேசிலின் தாராவ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 628.8 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது. இதன் காரணமாக அங்கு பல வீடுகள் குலுங்கின. இதனால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இது அங்கு வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory