» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் வங்கியில் ஐ.எஸ். தற்கொலை படை தாக்குதல்: 3 பேர் பலி

சனி 23, மார்ச் 2024 9:24:38 AM (IST)



ஆப்கானிஸ்தானில் உள்ள வங்கியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தற்கொலை படை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலீபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பயங்கரவாத செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அப்பாவி பொதுமக்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். எனவே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காந்தகாரில் தனியார் வங்கி ஒன்று செயல்படுகிறது. இங்கு பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் பலர் சென்றிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான மர்ம நபரும் அங்கு சென்றார். மக்கள் கூட்டத்துக்குள் சென்ற அவர் திடீரென தனது உடலில் பொருத்தப்பட்டு இருந்த குண்டுகளை வெடிக்க செய்தார். எனவே பயங்கர சத்தத்துடன் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்றொருபுறம் அந்த வங்கிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. எனினும் இந்த தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் வங்கி ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory