» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் கப்பல் மோதி விபத்து: பாலம் இடிந்து விழுந்தது!

செவ்வாய் 26, மார்ச் 2024 3:24:26 PM (IST)



அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலத்தில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற மிகப்பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை இந்த பாலத்தின் மீது பெரிய சரக்கு கப்பல் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கையின் கொழும்பு நகருக்குச் சென்று கொண்டிருந்ததாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில், 2.6 கி.மீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து நீரில் மூழ்கியுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஷ்மோர் நகரத் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory