» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் பழமையான கோயில் இடித்துத் தகர்ப்பு: ஹிந்துக்கள் அதிர்ச்சி!! !

சனி 13, ஏப்ரல் 2024 11:58:43 AM (IST)

பாகிஸ்தானில் வணிக வளாகம் கட்டுவதற்காக பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள ’கைபர் கோயில்’, 1947-ஆம் ஆண்டு முதல், பக்தர்கள் யாரும் வழிபடாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் சிதிலமைடைந்து காட்சியளித்த கோயில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கோயில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் ஹிந்து கோயில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுடைய வரலாற்று கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து மறுசீரமைப்பது, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் பொறுப்பு என பாகிஸ்தான் ஹிந்து கோயில் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நிலப் பதிவேட்டில் கோயிலைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

makkalApr 18, 2024 - 09:45:00 AM | Posted IP 172.7*****

Thamilnattilayae Hindu kovilgal idikkappadukirathu. Ithanaiyae thadukka mudiyavillai.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory