» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சவூதி அரேபியாவில் 3 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 11:58:52 AM (IST)
சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றுவது மூன்று வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவூதி அரசின் செய்திப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 பேரில், சோமாலியா நாட்டைச் சேர்ந்த நான்கு பேரும், எத்தியோபியாவைச் சேர்ந்த ஒருவரும், சவூதிக்குள் போதைக் பொருள் கடத்தி வந்தக் குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்து. ஒரு சவூதியைச் சேர்ந்த நபருக்கு, அவரது தாயைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆணடு தொடங்கியது முதல், சவூதி அரேபியாவில் இதுவரை 230 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது. இவர்களில் சுமார் 150 பேர் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள். கடந்த ஆண்டு மட்டும் சவூதியில் 338 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதை தோற்கடிக்கும் வகையில் இந்த ஆண்டு மரண தண்டனை அதிக வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சவூதி அரேபியாவில் தற்போது, போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம் மீண்டும் தொடங்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து வெடித்தது; 7 பேர் சாவு; 11 பேர் படுகாயம்
வியாழன் 6, நவம்பர் 2025 8:36:32 AM (IST)

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)




