» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

அமீரக லாட்டரி குலுக்கலில் அனில்குமார் பொல்லா என்ற இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு விழுந்துள்ளது.
அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் அனில்குமார் பொல்லா (29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந் தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார். இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அமீரகத்தில் இதுவரை இத்தனை பெரிய தொகை யாரும் லாட்டரியில் பரிசாக வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனில்குமார் பொல்லாவின் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தான் முதலில் சொகுசு சூப்பர் கார் ஒன்றை வாங்கி பிறகு எழு நட்சத்திர ஓட்டலில் ஒரு மாதம் தங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த பணத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பதை கவனமாக திட்டமிட நான் நேரம் எடுத்துக்கொள்வேன் என கூறியுள்ளார். அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்ற அனில்குமார் பொல்லாவுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)


