» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானின் கடல் மற்றும் வான் பாதுகாப்பு ஆயுத உள்கட்டமைப்புகளை அமெரிக்க ராணுவம் முழுமையாகத் தகர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து பிப்ரவரி 28 அன்று வான்வழித் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து, இருதரப்பும் மாற்றி மாற்றிப் பதிலடி கொடுத்து வந்தன. பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மோதல் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
எனினும், ஹார்மூஸ் ஜலசந்திப் பகுதியில் ஈரான் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தாக்குதலில் ஈரானின் அதிகாரத்துவம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன.
ஈரானின் ராணுவத்திடம் இருந்த 159 கப்பல்களும் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் வசம் இருந்த 200 விமானங்களும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் ரேடார்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைக் கருவிகள் மற்றும் ஆயுத உற்பத்தித் திறன்கள் தகர்க்கப்பட்டுள்ளன. ஈரானின் ஒட்டுமொத்த ராணுவத் தளவாடங்களில் 84 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாத காலத் தாக்குதல்களின் வழியாக ஈரானைக் கற்காலத்திற்குத் தள்ளியுள்ளதாகவும், மத்திய கிழக்கில் அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானிடம் இனி மிகக் குறைந்த அளவிலான ஏவுகணைகளே உள்ளதால், அது அமெரிக்காவிற்கு இனி அச்சுறுத்தலாக இருக்காது என்றும் டிரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)

எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:09:21 PM (IST)


