» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி: இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:42:30 PM (IST)

உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, ரஷிய தூதருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இச் சூழலில், உக்ரைனின் ஒடேசா நகரத் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 19-ஆம் தேதி கினியா பிசாவ் நாட்டுக்கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தின.
இத் தாக்குதலில் கப்பலில் பயணித்த இந்திய மாலுமிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு இந்திய மாலுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து விளக்கமளிக்கக் கோரி, புதுடெல்லியிலுள்ள ரஷிய தூதருக்கு மத்திய அரசு முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளது. இச் சம்பவம் சர்வதேச அளவிலும், இந்திய வெளியுறவுத்துறை மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:01:30 PM (IST)

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)


