» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பணி ஓய்வு பெறும் இளநிலை உதவியாளருக்கு வாழ்த்துக்கள்

வெள்ளி 1, ஜூலை 2022 10:27:37 AM (IST)

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி இளநிலை உதவியாளர் சுரேஷ்  குமார் ரோலண்ட்ஸ் செல்லையா பணி ஓய்வு பெற்றுள்ளார். 

அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி இளநிலை உதவியாளர் சுரேஷ்  குமார் ரோலண்ட்ஸ் செல்லையா அவர்கள் மிகவும் நேர்மையான பணியாளர். தினந்தோறும் அரசு விடுமுறைகளை கூட கணக்கில் கொள்ளாமல் பணிக்கு வருபவர். பணியிடத்தில் அலுவலக பணிநிமித்தம் அன்றாடம் சந்திக்கும் மருத்துவர்கள், பிற அலுவர்கள், பணியாளர்கள், காவல்துறை அலுவலர்கள்,  பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் புன்னகையுடன் சேவை செய்யும் தூய மனம் கொண்டவர். 

ஆடையும் வெள்ளை, மனமும் வெள்ளை. உறைவிட மருத்துவர் அலுவலகத்தில்  பணிபுரிந்த சுமார் 4 ஆண்டுகால பணிக்காலம் இவருக்கு நிகர் இவரே. இனிவரும் ஓய்வு காலங்களில் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன், மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறோம். உறைவிட மருத்துவ அலுவலர் மற்றும் பணியாளர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory