» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவகளையில் அகழாய்வு: முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி தொடங்கியது

புதன் 10, ஆகஸ்ட் 2022 7:58:10 PM (IST)



சிவகளை அகழாய்வில் கண்டறியப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலத்தாலான பொருட்கள், சங்கு பொருட்கள், நெல் மணிகள் போன்றவை கண்டறியப்பட்டன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகளானது சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டது. சிவகளை அகழாய்வில் கண்டறியப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி இன்று புதன்கிழமை தொடங்கியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன், சிவகளை அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் முதுமக்கள் தாழிகளை திறந்து, அவற்றில் இருந்த எலும்பு துண்டுகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவற்றை சேகரித்தனர்.

இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது: சிவகளை பரும்பு பகுதியில் 10 குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளை முதல்கட்டமாக திறந்து ஆய்வு செய்கின்றோம். முதுமக்கள் தாழிகளில் உள்ள பழங்கால பொருட்களின் தொன்மையை கண்டறிவதற்காக, அவற்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அங்கு இதற்கான சிறப்பு ஆய்வுக்கூடம் உள்ளது. உயிரியல் முறையிலும், ரசாயன முறையிலும் மரபணு சோதனை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory