» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் வக்கீல் உள்பட 3 பேர் சிக்கினர்
வெள்ளி 8, டிசம்பர் 2023 8:11:21 AM (IST)
நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் வக்கீல் உள்பட 3 பேர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படைவீடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் சுருளிராஜன் (வயது 52). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று முன்தினம் கே.டி.சி. நகரில் இருந்து பாளையங்கோட்டைக்கு காரில் சென்றார்.
அப்போது அவர் பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளால் காரின் பின் பகுதியில் மோதியது. காரில் இருந்து இறங்கிய சுருளிராஜனை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் சுருளிராஜனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக சுருளிராஜன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரும், கோவையில் பதுங்கி இருந்த 2 பேரும் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
