» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேக்கு மரம் கடத்திய 2 பேர் கைது: வன அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்!

சனி 16, டிசம்பர் 2023 11:17:01 AM (IST)



தென்காசி அருகே தேக்கு மரங்களை வெட்டி கடத்திய கும்பலோடு தொடர்புடைய 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வன அலுவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் வனச்சரக எல்கைக்குட்பட்ட புளியரை மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது மோட்டை நீர்தேக்கம். இந்த நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் அதிகளவு தேக்கு மரங்கள் வளர்ந்துள்ளன. பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இம்மரங்களை சட்டவிரோதமாக சிலர் வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், வன அலுவலர் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, நன்கு வளர்ந்த தேக்கு மரங்களை, மர்மநபர்கள் சட்டத்திற்கு புறம்பாக வெட்டி கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதை அதிகாரிகள்‌ கண்டுபிடித்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், கடத்தல் கும்பலோடு தொடர்புடைய முகமது கனி, பொன்னுத்துரை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் சில நபர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவான மற்றவர்களை பிடிக்கும் பணியிலும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory