» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: ஜன.12 இல் வாக்கெடுப்பு கூட்டம்

சனி 30, டிசம்பர் 2023 10:19:34 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதம், வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு கூட்டம் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 47 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், அதிமுக 4 இடங்களிலும் வென்றன. திமுகவைச் சோ்ந்த பி.எம்.சரவணன் மேயராகவும், கே.ஆா்.ராஜு துணை மேயராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 

அதன்பின்பு மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் இடையே தொடா்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு கூட்டங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேயரைக் கண்டித்து திமுக மாமன்ற உறுப்பினா்களே வாயிலில் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா். இதையடுத்து திமுகவைச் சோ்ந்த 3 மாமன்ற உறுப்பினா்கள் கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில் அனைத்து பிரச்னைகளுக்கும் மேயா் பி.எம்.சரவணனே காரணம் எனக்கூறியும், அவரை மாற்றக்கோரி நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு மீண்டும் நடத்த 38 மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனு அளித்திருந்தனா். அந்த மனு பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதம் நடத்த ஜனவரி 12 ஆம் தேதி கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மாமன்ற உறுப்பினா்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 51 (2) (3) இன் படி திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினா்களால், மாமன்றத் தலைவா் (மேயா்) மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் ஜனவரி 12 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மண்டப கூட்ட அரங்கில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory