» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 2நாட்கள் கனமழை வாய்ப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

திங்கள் 8, ஜனவரி 2024 3:46:39 PM (IST)

நெல்லையில் 2நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்று பகலிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை விட்டு, விட்டு பெய்தது.

இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 142 அடியாக (உச்சநீர்மட்டம் 143) உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,273 கன அடியாக அதிகரித்து உள்ளது. இந்நிலையில், நெல்லையில் நாளை மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory