» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் - சீமான்

திங்கள் 8, ஜனவரி 2024 4:59:27 PM (IST)

பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி மாணவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 'பெல்' தனியார் பள்ளியில் படித்துவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் நரேனை பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக அவமானப்படுத்தி, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மனவுளைச்சலுக்கு ஆளாக்கிய பள்ளி நிர்வாகத்தின் செயல் பெரும் அதிர்ச்சியும், கடும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது. பெற்றெடுத்து பேணி வளர்த்த அன்பு பிள்ளையை இழந்துவாடும் மாணவர் நரேனின் பெற்றொருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

மாணவரை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராடிய மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்துறையை ஏவி கைது செய்துள்ள திமுக அரசின் சிறிதும் மனச்சான்று அற்ற கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, மாணவர் தற்கொலைக்கு நீதி வேண்டி போராடும் மனித உரிமை அமைப்புகளை போராட அனுமதியாது தடுப்பதென்பது கொடுங்கோன்மையாகும். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் சமூகநீதி ஆட்சியா? கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாணவி அன்புமகள் ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டபோது, பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட அதே கொடும் அணுகுமுறையையே தற்போதும் திமுக அரசு கடைபிடிப்பது வெட்கக்கேடானதாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியாவது அறத்தின் பக்கம் நின்று பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் நரேன் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து விரைந்து நீதிவிசாரணை செய்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து

மக்கள்Jan 10, 2024 - 09:52:08 AM | Posted IP 162.1*****

அதான் நம்ம ஊரு அரசு பள்ளிகள் தான் பெஸ்ட்.

SaminathanJan 9, 2024 - 05:50:27 PM | Posted IP 172.7*****

கல்வி மிகபெரிய வியாபாரம் ஆகிபோனது இன்னும் எத்தனை உயிர்களை பறிக்க போகிறதோ விடியா அரசுக்கு இது கவலை இல்லை பணம் பணம் பணம் தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory