» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தோரணமலையான் நூல் வெளியிடு

வெள்ளி 26, ஜனவரி 2024 12:37:30 PM (IST)



தோரணமலையில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய  தோரணமலையான் நூல் வெளியீட்டு விழா நடந்தது. 

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோயில் மிகவும் சிறப்பானது. இங்குள்ள முருகன் கோயில் குடவரைக்கோயில். மலை மீது உள்ள  இந்த கோயிலை தற்போது கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஏற்பாடில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இந்த கோயிலில் தை பூசம் அன்று முருகப்பெருமான் திருக்கல்யாணம், மற்றும்  பக்தர்களின் வேண்டுதலாக காவடி எடுத்துவருதல், அலகு குத்தி வருதல் மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாகும். 

இந்த கோயிலில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தோரணமலையான் எனும் நூல்  வெளியிட்டு விழா நடந்தது. பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் வெளியிட, கவிஞர் ராஜேஷ் மலர் வண்ணன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியல் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எழுத்தாளர் கடையம் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்  தோரணமலை முருகா வருவாயே ஒலி மற்றும ஒளி வடிவ பாடல்கள் வெளியிடப்பட்டது.  

தோரணமலை முருகன் சிறப்பை தாங்கி வரும் வான் விளக்குமாத இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. தோரண மலையில்  விடுதலைபோராட்ட வீரர் காஜிமேஜர்புரம் சந்திர பாண்டியன் கௌரவிக்கப்பட்டார்.  தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது.  இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன்  தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory