» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை காங்கிரஸ் தலைவர் எரித்துக்கொலை? - போலீசார் விசாரணை

சனி 4, மே 2024 12:52:51 PM (IST)

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணத்திற்கு முன்பாக எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரது அறையில் கடிதங்கள் எதுவும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளாரா என்று போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு டைரியில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் குறித்த விபரத்தையும், யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் அவர் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் கையோடு எடுத்துச்சென்றுள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஜெயக்குமார் தனசிங், கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு மரண வாக்குமூலம் என்ற பெயரில் தனது காங்கிரஸ் கட்சி லெட்டர் பேடில் ஒரு புகார் மனு கைப்பட எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என்று கூறி சிலரது பெயரை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த நபர்கள் தனக்கு லட்சக்கணக்கில் பணம் தரவேண்டும் எனவும், அவர்கள் ஏமாற்றியதன் காரணமாக, வெளியில் கடன் வாங்கி அதனை செலுத்த முடியாமல் திணறி வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரை எல்லாம் குறிப்பிட்டுள்ளாரோ? அந்த நபர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory