» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இராஜகோபாலப்பேரியில் கிராமசபைக் கூட்டம் : தென்காசி ஆட்சியர் பங்கேற்பு

சனி 27, ஜனவரி 2024 10:10:50 AM (IST)



தென்காசி மாவட்டம்  கீழப்பாவூர்  ஊராட்சி ஒன்றியம்; இராஜகோபாலப்பேரி ஊராட்சியில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சியின் முதல் 3 காலாண்டிற்கு வரவு செலவு மற்றும் கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் ஜல்ஜீவன் மிசன் திட்டப் பணிகள், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் வளர்ச்சி பணிகள், மேலும் ஊராட்சி அடிப்படை வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து போன்ற 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கிராமசபைக் கூட்டத்திற்கு சுமார் 227 நபர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தோட்டக்கலைத் துறைசார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் வெங்காய சேமிப்பு கிடங்கு மானியம் ரூ.87,500, கத்தரி மற்றும் குழி தட்டு நாற்றுகள் மானியத் திட்டம் விவாதிக்கப்பட்டது. வேளாண்மைதுறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் பிஎம் கிசான்  திட்டம் ஆகியவை பற்றி எடுத்து கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மு.கிருஷ்ண ஜெயந்தி, மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) கவிதா, ஊரகவளர்;ச்சி உதவி இயக்குனர் (கிராமஊராட்சிகள்) பிரான்சிஸ் மகராஜன், மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஜெயபாரதிமாலதி, வீ.கே.புதூர் வட்டாட்சியர் அழகப்பராஜா, தென்காசி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் முருகையா, தலையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை மற்றும் பற்றாளர்) அ.கணேசன், மண்டல துணை வட்டாட்சியர் முருகன், வீ.கே.புதூர் வருவாய் ஆய்வாளர் இசக்கிமுத்து. வீ.கே.புதூர் கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.வேதங்கண்ராஜ், ஊராட்சி செயலர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அனைத்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory