» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணியை பாதுகாக்க ஆசிரியர்கள் சபதம் ஏற்க வேண்டும்: முத்தாலங்குறிச்சி காமராசு பேச்சு

சனி 27, ஜனவரி 2024 7:56:50 PM (IST)



தாமிரபரணியை பாதுகாக்க பயிற்சி ஆசிரியர்கள் சபதம் ஏற்க வேண்டும் என‌ பாளை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில் தமிழ், வரலாறு, மற்றும் கணினித்துறை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நடத்திய இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது. அருட்தந்தை அருள்ஜோசப் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் வரலாற்றின் அரிச்சுவடி பொருநை என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். 

அவர் பேசும் போது வருங்கால மாணவர்களை உருவாக்குவது பயிற்சி ஆசிரியர்கள் தான். எனவே வரும் தலைமுறைகளை கொண்டு தாமிரபரணி நதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை சபதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

கணினித்துறை பயிற்சி ஆசிரியை சரண்யா வரவேற்றார். தமிழத்துறை பயிற்சி ஆசிரியை கனகலெட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சில் துணை முதல்வர் ஷெர்லின், வரலாற்று துறை உதவி பேராசிரியர் அந்தோணி ராஜ், தமிழ் உதவி பேராசிரியர் உ.சுப்பிரமணியன், கணினி உதவி பேராசிரியர் நிக்கோலஸ் உள்பட ஆசிரிய பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழத்துறை பயிற்சி ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory