» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை திறப்பதில் சிக்கல்!

செவ்வாய் 30, ஜனவரி 2024 8:06:17 AM (IST)



தென்காசி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை திறப்பதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தென்காசி மாவட்டம் கடந்த 22.11.2019ந் தேதியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி புதிய மாவட்டமாக உருவானது. அதனைத் தொடர்ந்து G.O.(MS)No. 378 dt. 22.07.2022 தேதியிட்ட அரசாணையின்படி தென்காசி முனிசிபல் கார்ப்பரேஷன் புல எண் 36க்கு உட்பட்டு சுமார் 44960 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மேற்படி அரசாணையின்படி முழுவதுமாக கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியின்றியும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றியும் முழுமையாக கட்டப்பட்டுள்ளதற்கு எதிராக மாண்பமை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் O.A.No.85/2022 (SZ)-ன்படி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. வி. இராமசுப்பு B.A.B.L., வழக்கு தாக்கல் செய்தார். 

மேற்படி வழக்கை சரிவர விசாரிக்காமல் அவசர கதியில் மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த மேற்படி மாண்பமை பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மாண்பமை உச்சநீதிமன்றத்தில் Civil Appeal No. 23282/2023-ன்படி மேல்முறையீடு செய்யப்பட்டது. 

மேற்படி மேல்முறையீடு கடந்த 05.01.2024ந் தேதி மாண்பமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் மேற்படி கட்டிடத்தின் தொடர் கட்டுமான பணிகளை தொடர மாட்டோம் என கொடுத்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டும், சட்டவிரோதமாக கட்டப்பட்டதற்காக சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக நஷ்டஈடை கணக்கிட்டு வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் மீண்டும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு உத்தரவு வழங்கி வழக்கை முடித்து வைத்தது. 

எனவே மீண்டும் வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்வதால் மேற்படி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை திறப்பதில் தமிழக அரசுக்கு சிக்கல் நீடிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory