» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.25-க்கு விற்பனை

செவ்வாய் 30, ஜனவரி 2024 8:23:11 AM (IST)

நெல்லையில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சமையலில் சிறிதளவு இடம் பிடித்தாலும், முக்கிய அங்கம் வகிப்பதாக சின்ன வெங்காயம் (உள்ளி) உள்ளது. நெல்லையில் இதன் விலை கடந்த மாதம் கடுமையாக உயர்ந்திருந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. பண்டிகை முடிந்த பிறகு சின்ன வெங்காயம் விலையும் படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.

எப்போதும் பல்லாரியை விட இரு மடங்கு விலை உயர்ந்து இருந்த சின்ன வெங்காயத்தின் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது நேற்று 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் பல்லாரியும் கிலோ ரூ.25-க்கு விற்பனையானது. சில கடைகளில் 4 கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், 5 கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இதேபோல் பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிலோ ரூ.120-க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது விலை குறைந்து ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை கடந்த சில நாட்களாக ரூ.35-ஆக நீடித்து வருகிறது. உருளைக்கிழங்கு விலையும் ரூ.26-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் தூத்துக்குடி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையும், பல்லாரி ரூ.20 முதல் ரூ.25 வரையும் விற்பனை செய்யப்பட்டது. தென்காசியில் சின்ன வெங்காயம் ரூ.25 முதல் ரூ.33 வரையும், பல்லாரி ரூ.30-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "மராட்டிய மாநிலத்தில் இருந்து பல்லாரி, சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது. அதுபோல் கர்நாடக மாநிலம் மைசூரு, தர்மபுரி மாவட்டம் தாளவாடி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்தொடங்கி உள்ளது. இதனால் விலை குறைந்து உள்ளது” என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory