» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மீது மினி பஸ் மோதி விபத்து: 2பேர் பலி

புதன் 31, ஜனவரி 2024 8:23:37 AM (IST)

விக்கிரமசிங்கபுரம் அருகே மினி பஸ்-பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் அருள் (52). அகஸ்தியர்பட்டி அருகே உள்ள கல்சுண்டு காலனி பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் முத்துக்குமார் என்ற மாதவன் (25). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள் ஆவர். நேற்று காலையில் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர். மாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை மாதவன் ஓட்டினார். பின்னால் அருள் அமர்ந்திருந்தார். விக்கிரமசிங்கபுரம் நோக்கி பாபநாசம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தனர். விக்கிரமசிங்கபுரம் அருகே அடையகருங்குளம் பகுதியில் வரும் போது எதிரே விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து அம்பை நோக்கி ஒரு மினி பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மினி பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் ேமாதிக் கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருள், மாதவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவர் பிரம்மதேசத்தை சேர்ந்த இசக்கியை (45) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory