» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை புத்தக கண்காட்சியில் நூல் வெளியிட்டு விழா

ஞாயிறு 11, பிப்ரவரி 2024 10:01:20 PM (IST)



பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் நெல்லை படைப்பாளர் அரங்கில் காமராசு செல்வன் எழுதிய விடிலிக்காடு நாவல் வெளியீட்டு விழா நடந்தது.

எழுத்தாளர் சிற்பி பாமா தலைமை வகித்தார். பாப்பாக்குடி செல்வமணி, முனைவர் கந்தசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நூலை வெளியிட முனைவர் ஜோசப்ராஜ், முதல் நூலை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான், தமிழ்ச்செம்மல் பாமணி, பட்டிமன்ற நடுவர் புத்தனேரி கோ. செல்லப்பா, கவிஞர் ஜெயபாலன், கவிஞர் சுப்பையா, ஆசிரியர் ஆவுடையப்ப குருக்கள், பாப்பாக்குடி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலாசிரியர் காமராசு செல்வன் ஏற்புரை வழங்கினார்.

பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் நெல்லை படைப்பாளர் அரங்கில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

புத்தனேரி செல்லப்பா தலைமை வகித்தார். தமிழ்ச்செம்மல் பாமணி, ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆ நூலை பாப்பாக்குடி செல்வமணி வெளியிட முதல் நூலை நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான் பெற்றுக்கொண்டார். சிற்பி பாமா முனைவர் ஜோசப்ராஜ், முனைவர் கந்தசுப்புகவிஞர் ஜெயபாலன், கவிஞர் சுப்பையா, ஆசிரியர் ஆவுடையப்ப குருக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். எழுத்தாaளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார்.

பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் வள்ளலார் அரங்கில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தீதும் நன்றே நாவல் அறிமுக விழா நடந்தது.தன்னூத்து குமரன் அறிமுகம் செய்ய புத்தனேரி செல்லப்பா, தமிழ்ச்செம்மல் பாமணி ஆகியோர் பெற்றுக் கொண்டார் நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான், சிற்பி பாமா முனைவர் ஜோசப்ராஜ், முனைவர் கந்தசுப்பு, கவிஞர் ஜெயபாலன், கவிஞர் சுப்பையா, எழுத்தாளர் நக்கீரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory