» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

செவ்வாய் 13, பிப்ரவரி 2024 8:08:22 AM (IST)

நெல்லை அருகே நடந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பாபு செல்வம் (21). வெல்டிங் தொழில் செய்து வந்தார். பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் மாரிஜெகன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் மாரிஜெகன் தரப்பினர் முத்துவேலை கத்தியால் குத்தினர். 

இந்த சம்பவத்தில் மாரிஜெகனுக்கு பாபுசெல்வம் ஆதரவாக செயல்படுவதாக நினைத்து முத்துவேலின் உறவினரான அருணாசலம், பாபுசெல்வத்தை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார். அதன்படி அருணாசலம், அவருடைய கூட்டாளிகளான அரியகுளத்தை சேர்ந்த சந்துரு (21), சாந்திநகரை சேர்ந்த மகாபிரபு (22) மற்றும் சிவபெருமாள் (19), கார்த்திக் பாண்டியன் (29), அன்பு (23) ஆகிய 6 பேர் கடந்த 10-ந்தேதி வேலைக்கு சென்ற பாபுசெல்வத்தை நெல்லை அருகே ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இந்த கும்பலை சேர்ந்த கார்த்திக் பாண்டியன், அன்பு, சிவபெருமாள் ஆகியோர் சிவந்திபட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற சுரேஷ் (27) என்பவரையும் முன்விரோதம் காரணமாக செய்துங்கநல்லூர் அருகே வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பாண்டியன், அன்பு, சிவபெருமாள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதேபோல் பாபு செல்வம் கொலை வழக்கு தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துரு, மகாபிரபு ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான அருணாசலத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் அவரை பிடித்து போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory