» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஜே.இ.இ. முதன்மை தேர்வு: நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் முதலிடம்!

புதன் 14, பிப்ரவரி 2024 11:35:02 AM (IST)

ஜே.இ.இ. முதன்மை தேர்வில் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.

நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. நாடு முழுவதும் 290 நகரங்களிலும், அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளிலும் நடந்த இந்த தேர்வை 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். ஆங்கிலம், இந்தி மட்டுமில்லாது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டிருந்தது. அபுதாபி, ஹாங்காங் மற்றும் ஒஸ்லோ நகரங்களில் முதல்முறையாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் ஜே.இ.இ, முதன்மை தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார். தேர்வு எழுதிய 11 லட்சம் மாணவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில், 23 மாணவர்கள் 300-க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். அவர்களில் முகுந்த் பிரதீசும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தவரிசையில் மாணவிகள் யாரும் இடம்பெறவில்லை. அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். 2-ம் கட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான விண்ணப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

VIJAYFeb 14, 2024 - 03:30:24 PM | Posted IP 172.7*****

Congratulations

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory