» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு!

வியாழன் 15, பிப்ரவரி 2024 9:49:39 AM (IST)


கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளரான ரவுடி கோபால் கொலை வழக்கில், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், 2 நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர், ரவுடியுமான கருப்பத்தூர் கோபால் என்கின்ற கோபாலகிருஷ்ணன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால், கடந்த 2021 அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து, லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 பிரிவு தனிப்படைகள் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்குத் தொடர்பாகத் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், உறுதுணையாக இருந்த கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா(36), சரவணன்(31), ஜெயராமன் கம்மநல்லூர் சுரேஷ்(38), நந்தகுமார்(35), கருப்பு குமார் உள்ளிட்ட 11 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், உடல் நலக்குறைவு காரணமாகக் கருப்பு ரவி தவிர பத்து நபர்களைக் கைது செய்யப்பட்டு, வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப்.15) பிற்பகல் 1 மணியளவில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.

அதில் முக்கிய குற்றவாளிகளான, கருப்பத்தூர் பகுதியை கருப்பத்தூர் ராஜா(36), வயலூர் சரவணன்(31), சுந்தர்(36), ரவி(26) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேபோல் கம்மநல்லூர் சுரேஷ்(35), நந்தகுமார்(32) ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், கரூரில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளராகவும் பிரபல ரவுடியாகவும் இருந்த கருப்பத்தூர் கோபால் கொலை வழக்கில், நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை அடுத்து, திருச்சி மத்தியச் சிறையில் குற்றவாளிகள் அனைவரும் துப்பாக்கி ஏந்திய, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory