» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் 7வது பொருநை புத்தகத் திருவிழா நிறைவு : ஆட்சியர் பாராட்டு!

வியாழன் 15, பிப்ரவரி 2024 10:11:46 AM (IST)



7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய  அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு  நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், மாநகராட்சி வர்த்தக மையத்தில் (பொருட்காட்சித்திடல்) நடைபெற்ற 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய  அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன்,  மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் முன்னிலையில், கேடயங்களை வழங்கி பாராட்டினார்கள்.

7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவினை (03.02.2024) அன்று  தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு  தொடங்கி  வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. படைப்பாளிகளின் நூல் வெளியிடுதல், கவியரங்கம், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  இன்று நிறைவு விழாவில்  சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன்,   பாராட்டு சான்றிதழ்களை  வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன்,   பேசியதாவது: 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து சிறப்பு நிதி ஓதுக்கிடு செய்து உத்தரவிட்டுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட பொறுப்பு அமைச்சரான  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களுக்கும்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், பொது நூலகத்துறைக்கும்  மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

புத்தகத் திருவிழாவினை ஒருங்கிணைத்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொருநை இலக்கிய திருவிழாவினை  6 மாதத்திற்கு முன்பாக தை மாதம் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தை மாதம் பொருநை இலக்கிய திருவிழா மற்றும் பொருநை இளைஞர்  இலக்கிய திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவில் மாணவ,மாணவியர்கள் பெரிய எழுத்தாளர்களிடம் உரையாற்றுவதற்கு இத்திருவிழா ஒரு வாய்ப்பாக அமைந்தது. எழுத்தாளர்களுக்கும்,   ஆர்வாளர்களுக்கும் பாடமாக அமைந்து சிறப்பு அம்சமாக திகழ்ந்தது பொருநை இலக்கிய திருவிழா மற்றும் பொருநை இளைஞர் திருவிழாவாகும். இவ்விழாவினை தொடர்ந்து பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பற்றிய பத்திரிக்கையாளர்கள் தினந்தோறும் நாளிதழ்களில் வெளியிட்டார்கள். உள்@ர் தொலைகாட்சிகள் இவ்விழாவினை விளம்பரப்படுத்தி மாணவ, மாணவியர்களிடம் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை ஆர்வம் அடைய செய்தார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து சிறப்பாக பணியாற்றினார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும்  எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் ஒவ்வொரு நாளும்  துப்புரவு பணியாளர்கள்  தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கு துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 7வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியும் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

திருநெல்வேலி மாவட்டம் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் அதிகமானோர்கள் உள்ள மாவட்டம். சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் அதிகமானோர்கள் உள்ள மாவட்டம். இந்த புத்தகத் திருவிழா இளம்தலைமுறையினரை இலக்கியவாதிகளாகவும், எழுத்தாளர்களாகவும் உருவாக்கும் என நான் நம்புகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாகவுள்ள புது எழுத்தாளர்களுக்கும், புது இலக்கியவாதிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்தாண்டை போலவே அடுத்த ஆண்டிலும் புத்தகத் திருவிழாவினை நடத்துவதற்கு குழுக்கள் அமைத்து  வரும் ஒவ்வொரு ஆண்டுகளும் பல்வேறு முன்னேற்றங்களுடன் சிறந்த ஒரு பொருநை நெல்லை புத்தகத் திருவிழா சிறப்புற நடைபெற வேண்டும் என வாழ்த்துக்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்தார்கள். முன்னதாக ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் வள்ளியூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட நரிக்குறவ பள்ளி மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா அவர்கள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் , (பபாசி சார்பாக) பாலாஜி பதிப்பகம் அதிபர் பாலாஜி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி , மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் , வட்டாட்சியர்; செல்வம் (பேரிடர் மேலாண்மை) எழுத்தாளர் நாறும்பூநாதன் , பேராசிரியர் சௌந்தரமகாதேவன், அரசு அருங்காட்சியக காப்பாளர்  சிவசத்தியவள்ளி மற்றும் மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory