» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் மார்ச் 9ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

வியாழன் 15, பிப்ரவரி 2024 4:53:41 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 2024-ஆம் ஆண்டின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற மார்ச் மாதம் 9ம்-தேதி நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்  பேரிலும் திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்  முதன்மை மாவட்ட நீதிபதியுமான சந்திரா தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி கருணாநிதி வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் படியும்  மற்றும் தென்காசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும்; முதன்மை சார்பு நீதிபதியுமான மாரீஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை நீதிமன்றங்களிலும் 2024-ஆம் ஆண்டின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற மார்ச் மாதம் 9ம்-தேதி நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றங்களின் முக்கிய நோக்கம் என்னவெனில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், நீதிமன்ற முன் வழக்குகளையும் விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதாகும். மேலும்  மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. 

சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள். உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள்) போன்ற வழக்குகளை, மக்கள் நீதிமன்றத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படுவதால் வென்றவர்-தோற்றவர் என்றபாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், மக்கள் நீதிமன்றம் வழிவகை செய்கிறது.

மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்காக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.  ஆகவே பொதுமக்கள் வரும் மார்ச் 9ம-;தேதி நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி, தங்கள் வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு கண்டு பயன் பெறலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory