» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் செம்புலப்பெயல் நீர் நூல் வெளியீட்டு விழா
திங்கள் 4, மார்ச் 2024 12:35:47 PM (IST)

நெல்லை சந்திப்பு டி.என்.ஜி.ஓ சங்க கட்டிடத்தில் வைத்து கவிஞர் ம. சக்தி வேலாயுதம் எழுதிய "செம்புலப்பெயல் நீர்” நூல் வெளியீட்டு விழா நடந்தது.
விழாவிற்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். கவிஞர் ஜெயபாலன், தமிழ்ச்செம்மல் பாமணி, கவிஞர் கோதை மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய தமிழ் பற்றாளர் சிவ செல்வ மாரிமுத்து வரவேற்றார். நூலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலப் பொதுச்செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டார். கவிஞர் பாப்பாக்குடி இரா செல்வமணி, ஏ.ஐ.டி.யூ.சி மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் நூலை பெற்றுக்கொண்டனர்.
பேராசிரியர் இராமசந்திரன், முனைவர் நா. சங்கரராமன் ஆகியோர் நூலை திறனாய்வு செய்தனர். தமிழக அரசின் ச.வே.சு விருதுபெற்ற எழுத்தாளர் நாறும்பூ நாதன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை கவிஞர் செ. ச. பிரபு, எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்கினார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். கவிஞர் ம. சக்தி வேலாயுதம் ஏற்புரையாற்றினார். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் செய்திருந்தது.
நிகழ்ச்சியில் ரெங்கன், சடையப்பன், முனைவர் கணபதி சுபிரமணியன், பேராசிரியர் ஹரிஹரன், தளவாய் திருமலையப்பன், சொக்கலிங்கம், சரவணகுமார், முனைவர் பிரியதர்ஷினி, மகாலெட்சுமி, கவிஞர் தாணப்பன், கவிஞர் ரமணி முருகேஷ், கவிஞர் காந்திமதி வேலன் , பிரியா பிரபு, கவிஞர் பார்த்திபன், வண்ணமுத்து , ஜனனி சக்தி வேலாயுதம், மூக்குப்பீறி தேவதாசன், தேரிக்காட்டு எழுத்தாளர் கண்ணகுமார விசுவரூபன், தம்பான், நூலகர் அகிலன் முத்துக்குமார், கண்ணன் புலமி, விக்டர் துரைராஜ், சண்முக சுந்தரம், மணிகண்டன், ராமசுப்பிரமணியன், தியாகராஜன், சுரேஷ்அஸ்வின் ஓவியர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது!
புதன் 22, அக்டோபர் 2025 8:55:10 AM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:09:49 PM (IST)

சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள்: ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 3:39:28 PM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)
