» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டில் பட்டாசு வெடித்து ஒருவர் பலி; கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்!

புதன் 6, மார்ச் 2024 8:25:26 AM (IST)

வீட்டில் பட்டாசு வெடித்து தொழிலாளி இறந்த சம்பவத்தில் உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்காத கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சாயமலை கொக்குகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ்வரன். இவர் மாசி திருவிழாவுக்காக பட்டாசுகளை வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார். கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து வீடு தரைமட்டமானதுடன் சதீஸ்வரனும் உடல் சிதறி பலியானார். அவரது மனைவி ராமலட்சுமியும் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சாயமலை கிராம நிர்வாக அதிகாரி சந்தன பூபதி மற்றும் தலையாரி மாரியப்பன் ஆகியோரை சங்கரன்கோவில் உதவி கலெக்டர் கவிதா திடீரென்று பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் கவிதா ஆகியோரை சந்தித்து, பணி இடைநீக்கம் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory