» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டி.எம்.பி., நிதியுதவியுடன் தாமிரபரணி ஆற்றுப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் துவக்கம்!

வெள்ளி 8, மார்ச் 2024 5:26:05 PM (IST)



தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிதி பங்களிப்புடன்,  தாமிரபரணி ஆற்றுப் பகுதியை தூய்மைப்படுத்தும் 2வது கட்ட பணியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணிமூர்த்தீஸ்வரம் முதல் நாரணம்மாள்புரம் வரை இருபுறமும் 7 கி.மீ நீளத்திற்கு தூய்மைபடுத்தும் பணியினை 2.3.2024 அன்று தொடங்கி வைத்தார். இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2-வது கட்டமாக மேலநத்தம் முதல் மணிமூர்த்தீஸ்வரம் வரை இருபுறமும் 10 கி.மீ நீளத்திற்கு தாமிரபரணி நதி தூய்மைப்படுத்தும் பணியினை இன்று (08.03.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், துவக்கி வைத்தார்கள்.

இப்பணி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிதி பங்களிப்புடன் நெல்லை நீர்வளம் அமைப்பு மற்றும் எவர்கிரீன் குளோப் நிறுவனத்தினர் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு நதியின் கரையில் புதர் செடிகளில் சிக்கியிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், சீமை கருவேலம் மரங்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்படவுள்ளன.

நதியினை புவிசார் குறியீடு முறையில் அளவீடு செய்து இருபுறமும் சர்வே கற்கள் நடப்படவுள்ளதோடு, தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தினால் பாதிக்கப்படாமலும் இந்நிலத்திற்கு உரியதாகவும் காணப்படும் நீர் மருது மரங்களை நதியின் கரையோரங்களில் நட்டு வளர்க்கப்படவுள்ளன. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் கரையில் குளிப்பதற்காக வரும் பொதுமக்களால் விட்டுச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பாட்டில்கள் ஆகியற்றை அப்புறப்படுத்தும் பணியில் சாராள்தக்கர் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டிருந்ததை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்ரீ.எஸ் கிருஷ்ணன், மண்டல மேலாளர் பரணிதரன் திருநெல்வேலி கோட்டாட்சியர் ச.கண்ணா கருப்பையா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வன், வருவாய் வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, நீர்வளத்துறை செயற் பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் தங்கராஜ், சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி , வி. எம். சத்திரம் மேம்பாட்டு அமைப்பு செந்தில், நம் தாமிரபரணி நல்ல பெருமாள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் மாவட்ட பேரிடர் மீட்புப் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து

VijayMar 9, 2024 - 04:02:22 PM | Posted IP 172.7*****

TVK Vijay Anna 👍

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory