» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேட்டையில் குழந்தைகளுக்கான பக்திநெறி பயிற்சி’ வகுப்பு!

வியாழன் 25, ஏப்ரல் 2024 10:30:05 AM (IST)

குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியருக்காக, திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையிலுள்ள ‘இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில்’  பக்திநெறி பயிற்சி வகுப்புகள் அடங்கிய ‘இஸ்கான் சம்மர் கேம்ப்‘ நடைபெறுகிறது. 

கிருஷ்ண கதைகள், ஸ்லோகங்கள் மனப்பாடம், பக்தி பாடல்கள், நடனம், நாம சங்கீர்த்தனம், ஓவியம், ஜெகன்னாதர் நாடகம், ராமாயண நன்னெறி, மஹாபாரத சிந்தனைகள், பகவத்கீதை, யோகா, மஹாமந்திர தியானம்  உள்ளிட்ட பன்னிரெண்டு வகுப்புகள் இந்த பக்திநெறி பயிற்சி கேம்ப்பில் இடம்பெறும். 

முக்கியமாக, நல்ல பழக்கங்களை பழகுதல், தவறான விஷயங்களை கைவிடுதல், பெற்றோர்களுக்கு உதவுதல், ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றுதல், கல்வியில் கவனம் செலுத்துதல், விடுமுறையை பயனுள்ளதாக்குதல் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை வலியுறுத்தும் வகையில் இந்த ‘பக்திநெறி பயிற்சி கேம்ப்’ நடைபெறுகிறது.

திருநெல்வேலி இஸ்கான் கோயிலில் நடைபெற உள்ள இந்த ‘பக்தி நெறி பயிற்சி’ வகுப்பில், பதினோரு வயது முதல் பதினேழு வயது வரையுள்ள மாணவர்களுக்கு (Boys Only Age 11 to 17) மே 1, 2, 3 தேதிகளில் நடைபெறும். பதினோரு வயது முதல் பதினேழு வயது வரையுள்ள  மாணவிகளுக்கு  (Girls Only Age 11 to 17) மே 7, 8, 9 தேதிகளில் நடைபெறும்.ஆறு வயது முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு (இருபாலரும்) (Kids Age 6 to 10)  மே 7, 8, 9 தேதிகளில் நடைபெறும்.

தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை தினமும் நான்கு வகுப்புகள் வீதம் மொத்தம் 12 வகுப்புகள் நடைபெறும்.   பன்னிரெண்டு  வகுப்புகளிலும் பங்கேற்று வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு  இஸ்கான் வழங்கும் ‘பக்திநெறி பயிற்சி சான்றிதழ்’ வழங்கப்படும்.

இந்த பயிற்சியில்  பங்கேற்க திருநெல்வேலி இஸ்கான் கோயிலில் வழங்கப்படும் ‘விண்ணப் படிவத்தை’ பூர்த்தி செய்து அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்த வேண்டும். முன்பதிவு குறித்த விபரங்களுக்கு 7558148198 என்ற இஸ்கான் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  முன்பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 27ம் தேதி ஆகும். 

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முன்பதிவுகள் நடைபெறுவதால், முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும். முன்பதிவு எண்ணிக்கை முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்களுக்கு கேம்ப் தேதி மாறுபடலாம்.  

வகுப்புகள் நேரடியாக இஸ்கான் கோயில் வகுப்பறையில் நடைபெறும். வகுப்பு நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை 9.15 மணிக்குள் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு வந்து விட வேண்டும். பிறகு வகுப்பு முடிந்த பின் மாலை 3.30 மணிக்கு திரும்ப அழைத்துச் செல்லாம்.  

இஸ்கான் நடத்தும் இந்த ‘பக்திநெறி பயற்சி வகுப்பு’ உலகளாவிய அளவில் மதிப்பு மிக்கதும், நல்ல பண்புள்ள மாணவ, மாணவியர்களை உருவாக்குவதற்கு அடித்தளம் அமைக்கவும் பேருதவியாக இருக்கும்.  இதற்கான ஏற்பாடுகளை இஸ்கான் மாணவர் நல பிரிவு செய்து வருகிறது. மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில் நிர்வாகத்தை 7558148198 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory