» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முத்தாலங்குறிச்சியில் பழமையான ஆலயங்கள் சீரமைக்க ஆய்வு

வியாழன் 2, மே 2024 12:26:23 PM (IST)



முத்தாலங்குறிச்சியில் உள்ள பழமையான கோயிலை புணரமைத்து பெரிதாக கட்டும் பணியை முன்னிட்டு  அறநிலையத் துறையினர் ஆய்வு செய்தனர். 

முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் லெட்சுமி நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தோடு இணைந்து ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோயில்கள் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடந்த பக்தர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த ஆலயங்களில் திருப்பணி செய்தவற்காக மாவட்ட அளவிலான கமிட்டி கூட்டத்தில் அனுமதி பெற்று, மாநில அளவிலான கமிட்டி அனுமதி கிடைத்துள்ளது. 

கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன் அவர்களிடம் கோயிலை புதிதாக கட்ட அறங்காவலர் காமராசு மனு செய்துள்ளார். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி கூறியுளார். இதற்கிடையில் முத்தாலங்குறிச்சியில் உள்ள பழமையான கோயிலான வீரபாண்டிஸ்வர், லெட்சுமி நரசிம்மர், ராம விநாயகர் கோயிலை புணரமைத்து பெரிதாக கட்ட நடவடிக்கையை இன்ஸ்பெக்டர் நம்பி தலைமையில் எடுத்து வருகிறார். 16 வது நிதிக்குழுவில் இந்த கோயிலை கட்ட பரிந்துரை செய்துள்ளார். 

இதனால் அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து கோயிலை ஆய்வு செய்தனர்.  உதவி கோட்ட பொறியாளர் அஸ்வினி , உதவி பொறியாளர் ரெங்கன் ஆகியோர் முத்தாலங்குறிச்சி வீரபாண்டீஸ்வரர், ராம விநாயகர், லெட்சுமி நரசிம்மர் கோயிலை ஆய்வு செய்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் நம்பி அறங்காவலர்கள் காமராசு, வள்ளி, மணி ஆகியோர் கலந்துகொண்டனர். விரைவில் இந்த கோயிலில் திருப்பணி நடைபெற, சோமசுந்தரம் தலைமையில் லெட்சுமி நரசிம்மர் பக்த ஜனசபாவும், விஸ்வநாத சுவாமி தலைமையில் வீரபாண்டீஸ்வரர் பக்த ஜனசபாவும் துவங்கப்பட்டுள்ளது.

ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கிராம கோயில் வரிசையில் இந்த கோயிலில் சுற்றுப்புறச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை தொடங்க உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory